TAMILENEWS
Monday, October 20, 2014
பெரியநீலாவணை-01ல் நடைபெற்ற திவிநெகும கட்டம்-06
நேற்று 20.10.2014 பெரியநீலாவணை-01ல் நடைபெற்ற திவிநெகும கட்டம்-06 ஆரம்ப நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படங்கள்...
Tuesday, February 4, 2014
பிரதேசசெயலகம் கல்முனை தமிழ் பிரிவில் 93 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
பிரதேச
செயலகம் கல்முனை தமிழ் பிரிவில்
பட்டதரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 93 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும்
நிகழ்வு இன்று
2014.02.04 ம் திகதி பிரதேசசெயலகதின் பிரதான
மண்டபத்தில் நடைபெற்றது. நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் பல்வேறு
அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில்
கலந்து கொண்ட பாராளுமண்ற உறுப்பினர்
திரு பி.எச். பியசேன,
மேலதிக அரசாங்க அதிபர் திரு.கே. விமலநாதன், கல்முனை
பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி
திரு. வசந்த குமார, பிரதேச
செயலாளா் திரு கே. லவநாதன்,
உதவித்திட்டமிடல் பணிப்பாளா் திரு பி. இராஜகுலேந்திரன்
ஆகியோர் நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தனர் இந்த நிகழ்வில் கலந்து
சிறப்பித்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
Friday, January 3, 2014
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் “திவிநெகும திணைக்களம்” திறப்பு
பிரதேச செயலகம் கல்முனை
தமிழ் பிரிவு ஏற்பாடு செய்த “திவிநெகும திணைக்களம்” திறப்பு நிகழ்வு இன்று (03.01.2013) ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பிரதேச
செயலக அலுவலகத்தில் சமூர்த்தி முகாமையாளர் திரு. சிவம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் திரு கே.லவநாதன்,
உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.
இராஜகுலேந்திரன் ஆகியோர் உரையாற்றுவதையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் படங்களில்
காணலாம்.
“MANS” சமூக சேவைகள் அமைப்பின் “தாறுல் MANS” தலைமை அலுவலகம் திறப்பு விழா
நற்பிட்டிமுனை “MANS” சமூக சேவைகள்
அமைப்பின் “தாறுல் MANS” தலைமை அலுவலகம் திறப்பு விழா அமைப்பின் தலைவர்
எஸ். றுஸ்வின் தலைமையில் இன்று மாலை 4.00 மணியளவில் நற்பிட்டிமுனையில் நடைபெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்த
நிகழ்வுக்கு சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார், கிராமசேவை உத்தியோகத்தர்களான
ஏ.எம். பசால், யூ.எம்.பதியுத்தீன் , அமைப்பின்
தவிசாளர் ஏ.எச்.எச்.எம்.நபார், செயலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ், பொருளாளர் எம்.எம்.
சில்மி, உபதவிசாளர் ஜெ.எம்.மிஹ்லார்,
ஸ்தாபத் தலைவர் எம்.ஐ.நிரோஸ், பிரதித் தலைவர்
ஜெ.எம்.அயாஸ் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Tuesday, December 31, 2013
Friday, December 27, 2013
Thursday, December 19, 2013
இந்த வருடம் கடமையிலிருந்த வேளை 52 ஊடகவியலாளர்கள் படுகொலை
52 ஊடகவியலாளர்கள் தமது கடமையின் நிமித்தம் இந்த வருடத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கண்காணிப்பு அமைப்பு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஊடகவியலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டமை தொடர்பில் இரண்டாவது மோசமான ஆண்டாக பதிவேடுகளில் சுட்டிக்காட்டப்படுகின்ற போதும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஊடகவியலாளர்களது படுகொலைகளில் வீழ்ச்சி காணப்படுவதாக நியூயோர்க்கை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வருடத்தில் அதிகளவான ஊடகவியலாளர்கள் மரணத்தை தழுவிய நாடுகள் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிரியா முதலிடத்தில் உள்ளது. அங்கு இந்த வருடம் 21 ஊடகவியலாளர்கள் தமது பணியின் நிமித்தம் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிரியாவுக்கு அடுத்து அதிகளவு ஊடகவியலாளர்கள் மரணங்களை எதிர்கொண்ட நாடுகள் வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் எகிப்து, பாகிஸ்தான், சோமாலியா, பிரேசில், ஈராக், மாலி, ரஷ்யா, துருக்கி, பங்களாதேஷ், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உள்ளன.
எகிப்தில் 6 பேரும் பாகிஸ்தானில் ஐவரும் சோமாலியாவில் நால்வரும், பிரேசில் மற்றும் ஈராக்கில் தலா மூவரும் மாலி மற்றும் ரஷ்யாவில் தலா இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேசமயம் துருக்கி, பங்களாதேஷ், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் தலா ஒரு ஊடகவியலாளர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் சிரியாவில் சுமார் 30 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர். ஊடகவியலாளர்கள் அதிகளவில் சிறையிலடைக்கப்பட்ட நாடாக தொடர்ந்து இரண்டாவது வருடமாக துருக்கி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஈரானும் சீனாவும் உள்ளன. இந்த ஆண்டில் சிறையிலடைக்கப்பட்ட 211 ஊடகவியலாளர்களில் அரைப்பகுதிக்கும் அதிகமானோர் மேற்படி நாடுகளில் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்கள் தமது பணிக்காக சிறையிலடைக்கப்படுவது சமூகத்தை நசு க்கும் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டது என பாதுகாப்பு சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜோயல் சிமொன் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)