Friday, December 27, 2013

மலசலகூட குழியை அகற்றுமாறு கோரி கல்முனையில் ஆர்ப்பாட்டம்


(சுப்னா)
கல்முனை இஸ்லாமபாத் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூட குழியை அவ்விடத்தை விட்டு அகற்றுமாறு கோரி வீட்டுத்திட்டத்திற்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் இன்று காலை கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட படங்கள்.




Thursday, December 19, 2013

இந்த வருடம் கடமையிலிருந்த வேளை 52 ஊடகவியலாளர்கள் படுகொலை

52 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையின் நிமித்தம் இந்த வரு­டத்தில் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்­காவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் கண்­கா­ணிப்பு அமைப்பு புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.
 
இந்த ஆண்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டமை தொடர்பில் இரண்­டா­வது மோச­மான ஆண்­டாக பதி­வே­டு­களில் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்ற போதும் கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது படு­கொ­லை­களில் வீழ்ச்சி காணப்­ப­டு­வ­தாக நியூ­யோர்க்கை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாது­காப்பு சபை குறிப்­பிட்­டுள்­ளது.
 
மேலும் இந்த வரு­டத்தில் அதி­க­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மர­ணத்தை தழு­விய நாடுகள் வரி­சையில் தொடர்ந்து இரண்­டா­வது ஆண்­டாக சிரியா முத­லி­டத்தில் உள்­ளது. அங்கு இந்த வருடம் 21 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது பணியின் நிமித்தம் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
 
சிரி­யா­வுக்கு அடுத்து அதி­க­ளவு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ள் மர­ணங்­களை எதிர்­கொண்ட நாடுகள் வரி­சையில் அடுத்­த­டுத்த இடங்­களில் எகிப்து, பாகிஸ்தான், சோமா­லியா, பிரேசில், ஈராக், மாலி, ரஷ்யா, துருக்கி, பங்­க­ளாதேஷ், கொலம்­பியா, பிலிப்பைன்ஸ், இந்­தியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் உள்­ளன. 
 
எகிப்தில் 6 பேரும் பாகிஸ்­தானில் ஐவரும் சோமா­லி­யாவில் நால்­வரும், பிரேசில் மற்றும் ஈராக்கில் தலா மூவரும் மாலி மற்றும் ரஷ்­யாவில் தலா இரு­வரும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
 
அதே­ச­மயம் துருக்கி, பங்­க­ளாதேஷ், கொலம்­பியா, பிலிப்பைன்ஸ், இந்­தியா மற்றும் லிபியா ஆகிய நாடு­களில் தலா ஒரு ஊட­க­வி­ய­லாளர் வீதம் கொல்­லப்­பட்­டுள்ளனர்.
மேலும் சிரி­யாவில் சுமார் 30 ஊட­க­வி­ய­லா­ளர்கள் காணாமல் போயுள்­ளனர். ஊட­க­வி­ய­லா­ளர்கள் அதி­க­ளவில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட நாடாக தொடர்ந்து இரண்­டா­வது வரு­ட­மாக துருக்கி முத­லி­டத்தில் உள்­ளது. அதற்கு அடுத்­த­டுத்த இடங்­களில் ஈரானும் சீனாவும் உள்­ளன. இந்த ஆண்டில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட 211 ஊட­க­வி­ய­லா­ளர்­களில் அரைப்­ப­கு­திக்கும் அதி­க­மானோர் மேற்­படி நாடு­களில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஊடகவியலாளர்கள் தமது பணிக்காக சிறையிலடைக்கப்படுவது சமூகத்தை நசு க்கும் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டது என பாதுகாப்பு சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜோயல் சிமொன் தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் தமிழ் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது, அக்கட்சியின் முன்னணி தலைவரான விக்னேஸ்வரன் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார்.
வடக்கு மாகாணத்தின் கவர்னராக ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ உள்ளார். அவர் வடக்கு மாகாண நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டு வருகிறார். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்னேஸ்வரன் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கவர்னருக்கும் முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் மனோ கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், வடக்கு மாகாண முதல்–அமைச்சருக்கும் கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் டெலிபோனில் விளக்கி கூறினேன். இது தொடர்பாக விக்னேஸ்வரனுடன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதற்காக யாழ்ப்பாணம் வரவும் தயாராக இருப்பதாகவும் ராஜபக்சே தன்னிடம் தெரிவித்தார்.
போருக்குப் பிறகு முதல் முறையாக தமிழர் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்–அமைச்சர் ராஜினாமா செய்தால் ஜெனிவாவில் வருகிற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும். எனவே தான் விக்னேஸ்வரனை சமாதானப்படுத்தும் முயற்சிக்கு ராஜபக்சே முன் வந்துள்ளார்.

திருமண வயது 18: சவூதி உலமாக்கள் அவை ஒப்புதல்!

சவூதி அரேபியாவில் திருமண வயதை 18 ஆக நிர்ணயிப்பதற்கும், கணவர் மீண்டும் திருமணம் முடித்தால் முதல் மனைவிக்கு விவாகரத்து வழங்கவும் சவூதி அரேபியாவின் முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) அவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்தகவலை அல் ஹயாத் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இஸ்லாம் கூறும் பெண்ணுரிமைகளை உறுதி செய்யும் சிபாரிசுகள் அடங்கிய தனிநபர் சட்ட திருத்தத்தின் வரைவு விரைவில் ஷூரா (ஆலோசனை) கவுன்சிலின் பரிசீலனைக்கு வரும். ஷூரா கவுன்சில் பரிசீலித்த வரைவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பின்னர் சவூதி ஆட்சியாளர் மன்னர் அப்துல்லாஹ் அதில் கையெழுத்திட்டால் இச்சட்டம் அமலுக்கு வரும்.
வளைகுடா நாடுகளில் ஏகமனதான தனி நபர் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இச்சட்டமாகும். சட்டச் சீர்திருத்தம் தொடர்பாக சவூதி அரேபியாவின் முஸ்லிம் உலமாக்களின் அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழு தனது அறிக்கையில் இளைஞர்-யுவதிகளின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அத்தியாவசிய சூழலில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால் தனக்கு விவகாரத்து செய்ய உரிமை உண்டு என்று திருமணம் செய்யும் வேளையிலேயே நிபந்தனையை விதிக்க பெண்ணுக்கு உரிமை உண்டு என்பது மற்றொரு சட்டப் பிரிவாகும்.
இல்லற வாழ்க்கை என்பது ஆண் ஆதிக்கத்திற்கு பதிலாக சம பங்களிப்புடன் கூடியது என்பதை உறுதி செய்யும் வகையிலேயே இச்சீர்திருத்தம் அமைந்துள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஆண்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கியிருப்பது ஆதிக்கத்திற்கான உரிமை அல்ல. இல்லற வாழ்க்கையை சுமூகமாகக் கொண்டு செல்வதற்கான நிபந்தனையாகும் என்று சட்ட வரைவு கூறுகிறது.
பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க தந்தை, அவர் இல்லாவிட்டால் சகோதரன் உள்பட மிகவும் நெருங்கிய உறவினர் கட்டாயம் என்பதைத் தவிர ஆண், பெண் இடையே உரிமைகளில் வித்தியாசம் ஏதுமில்லை.
விவாகரத்து பெறுவதற்கான குறிப்பிட்ட இடைவேளைகளில் மனைவி, கணவர் வீட்டில் தங்குவதற்கு உரிமை உண்டு. மூன்றாவது கட்டத்தை அடையாத தலாக்கிற்கு மட்டுமே இது பொருந்தும் என்று சட்ட வரைவு கூறுகிறது.
திருமணம், விவாகரத்து, குடும்ப வாழ்க்கை, உயில், பாகப் பிரிவினை உள்ளிட்ட விவகாரங்களில் இஸ்லாமிய நிபந்தனைகளின் அடிப்படையில் ஏகமனதான தனியார் சட்டம் கொண்டு வர 1996-ஆம் ஆண்டு ஒமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஜி.சி.சி.) உச்சி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாடுகளின் சூழலுக்கு தக்கவாறு சட்டதிருத்தம் கொண்டு வரவும் கருத்தொற்றுமை ஏற்பட்டது.

யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் திடீரெனப் புகுந்து அட்டகாசம்

கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் நேற்று 18.12.2013 ம் திகதி இரவு 9.30 மணியளவில் யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் திடீரெனப் புகுந்து அங்கு அட்டகாசம் பரிந்துள்ளது. இதில் வீடுகள், சுவர்கள், வயல்நிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




Wednesday, December 18, 2013

'நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞ்ர்களின் கையில்'


 'நாளைய போதையற்ற கிராமம்  இன்றைய இளைஞ்ர்களின் கையில்' என்ற தலைப்பில் கல்முனை பிரதேச செயலகத்தினால் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞ்ர்களுக்காக  நடாத்தப்பட்ட செயலமர்வு  நேற்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது  சமுர்த்தி தலைமைபீட  முகாமையாளர்  எ.ஆர்.எம்  ஸாலி தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர்  எம்.எம்.நௌபல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டபிள் யு .எம்.கபார், சமுர்த்தி   உத்தியோகத்தர் பலர் கலந்துகொண்டனர்.

Tuesday, December 17, 2013

Severed hand kept alive on man’s ankle

Chinese doctors have saved a man’s severed hand by grafting it to his ankle, it is reported. Xiao Wei lost his right hand in an accident at work but could not have it reattached to his arm right away.
Instead, the hand was kept alive by stitching it to Wei’s left ankle and “borrowing” a blood supply from arteries in the leg. A month later, surgeons were able to remove the hand and replant it back on his arm, according to Rex Features.
According to the report, Wei’s doctors from the Changsha region say he will need to undergo several other operations but they are hopeful that he will regain full function of his hand.
“His injury was severe. Besides ripping injuries, his arm was also flattened.
“We had to clear and treat his injuries before taking on the hand reattachment surgery.”
Cairian Healy of the Royal College of Surgeons in England said although procedures such as these were rare, they were not inconceivable.

கல்முனையில் உதயமாகிறது ஐக்கிய சதுக்கம்; முதல்வர் தலைமையில் அடிக்கல் நடும் வைபவம்!

கல்முனை நகரில் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், பெஸ்டர் றியாஸ், உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, இசட்.ஏ.எச்.ரஹ்மான், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினர் எம்.எஸ்.எம்.சத்தார், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறுக் உட்பட வர்த்தகப் பிரமுகர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளுக்காக கல்முனை தனியார் பஸ் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் தற்காலிகமாக செயற்பட்டு வந்த 17 தற்காலிக கடைகள் அவற்றின் உரிமையாளர்களின் இணக்கத்துடன் நேற்று உடைத்து அகற்றப்பட்டன.
ஐக்கிய சதுக்கம் திட்டத்தின் கீழ் கல்முனை நகரில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற தனியார் பஸ் நிலையம் சகல வசதிகளும் கொண்டதாக தவீனமயப்படுத்தப்பட விருப்பதுடன் அதனை இரவு நேரத்திலும் இயங்கச் செய்யும் வகையில் வர்த்தகத் தொகுதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளடக்கப்படவுள்ளன.
அத்துடன் சந்தாங்கேணி விளையாட்டு மைதானமும் பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதற்காக கொய்கா திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் முன்வந்துள்ளது.
ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் சகிதம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியை கடந்த மாதம் கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதன்போதே முதல்வரின் இத்திட்டத்திற்காக இரண்டு கோடி
ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு கொய்காவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி இணக்கம் தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் முதற்கட்ட நிதியாக இருபது லட்சம் ரூபாவுக்கான காசோலை அண்மையில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீதினால் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிதியின் மூலமே ஐக்கிய சதுக்கத்திற்கான முதற்கட்டப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.






Monday, December 16, 2013

ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த பெண்



இந்திய மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28) ஆவார். குழந்தை இல்லாத காரணத்தினால் செயற்கை முறையில் கருவுறுவதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுள்ளார். ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால் அவருக்கு பல கருக்கள் உருவாகியுள்ளன. கர்ப்பமாயிருந்த அவருக்கு நேற்றைக்கு முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கிராமத்திலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தின் சஞ்சய் காந்தி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அழைத்துவரப்பட்டார்.
அங்கு வருவதற்குள்ளாக வழியிலேயே அவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்திருந்தார். மருத்துவமனைக்கு வந்தவுடன் மருத்துவர்களின் உதவியுடன் மற்றொரு சிசுவையும் அவர் பெற்றார். ஆனால் அவற்றில் ஒன்று கூட உயிருடன் இல்லை. 12 வார வளர்ச்சியுடன் காணப்பட்ட அந்த சிசுக்கள் அனைத்தும் இறந்திருந்தன. செயற்கை முறையில் கருவுறச் செய்யும்போது அதனைத் தொடர்ந்து கண்காணிக்கத் தவறியதால் ஏற்பட்ட விளைவுதான் இது என்று அந்த மருத்துவமனையின் உதவி மேலாளரான டாக்டர் எஸ்.கே பதக் தெரிவித்தார். ஆரம்பத்திலேயே கரு உருவானதைக் கவனித்திருந்தால் மூன்று குழந்தைகள் வரை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்திய மருத்துவ வரலாற்றிலேயே அதிகபட்ச சிசுக்கள் ஒரே பிரசவத்தில் பிறந்தது இதுவே முதன்முறை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1971 ஆம் ஆண்டு ரோமில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 15 சிசுக்கள் அகற்றப்பட்டுள்ளதே உலக சாதனையாகக் கருதப்படுகின்றது.

'MANS' சமூச சேவைகள் அமைப்பின் புதிய நிருவாகசபைத் தெரிவு

நற்பிட்டிமுனை 'MANS' சமூச சேவைகள் அமைப்பின் 2014 ம் ஆண்டிற்கான் புதிய நிருவாகசபைத் தெரிவு (16.12.2013) திகதி மாலை 5.30 மணிக்கு நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலையத்தின் ஆரம்பப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது. ஆமைப்பின் முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் தவிசாளர் ஏ.எச்.எச்.எம்.நபார் முன்னிலையில் புதிய நிருவாகசபை தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிருவாக சபை
தலைவர் - எஸ்.றுஸ்வின்

செயலாளர் - ஏ.எல்.எம்.ஸினாஸ்

உப செயலாளர் - ஏ. அர்சாத்
பொருளாளர் - எம்.எம். சில்மி
உப பொருளாளர் - எம்.எம்.ஏ.றில்வி
தவிசாளர் - ஏ.எச்.எச்.எம்.நபார்
உப தவிசாளர் - ஜெ.எம்.மிஹ்லார்
உப தலைவர் - ஜெ.சப்றோஸ்
ஸ்தாபத் தலைவர் - எம்.ஐ.நிரோஸ்
பிரதம ஆசிரியர் - ஏ.எம்.இர்ஷhத்
உதவி ஆசிரியர்கள் - ஏ.எம். பஸ்லூன், எம். அதீப்
பிரதித் தலைவர்கள் - ஜெ.எம்.அயாஸ், ஏ.பி.எம். றிப்ஸாத், ஏ.நவ்பீன்
செய்தியாளர் - அன்ரனி கமல்ராஜ்
கணக்காளர் - ஐ.எல்.மர்ஜுன்
இணைப்பாளர் - எம்.நஜீம்
அமைப்பாளர் - எம்.ஜெஸார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் புதிய நிருவாகசபை உறுப்பினர்களாக 14 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.













Saturday, December 14, 2013

மருதமுனை மெல்போன் சிறுவர் கல்லூரி மாணவர்களின் வருடாந்த கலை கலாச்சார நிகழ்ச்சி

மருதமுனை மெல்போன் சிறுவரர் கல்லூரி மாணவர்களின் வருடாந்த கலை கலாச்சார நிகழ்ச்சி நேற்று மாலை மருதமுனை மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.  கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜறூன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜெ.லியாக்கத்அலி, சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர;.எஸ்.எல்.றியாஸ்,  விரிவுரையாளர் ஏ.ஜெ.எல்.வஸீல், அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி முன்னாள் பீடாதிபதி எம்.ஏ.எம்.ஜெலீல், தேசகீர்த்தி எஸ்.எம்.எம்.ஜாபிர்ஜி ஆகியோர் உரையாற்றுவதையும் மாணவர்களின் கலை நிகழ்சிகளையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.